• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சைக்கோ கொலைக்காரனான ஜெய்?

விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். தொடர்ந்து இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனது.

தற்போது பட்டாம்பூச்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்கி உள்ளார். மேலும், சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு நவ்நீத் இசையமைத்துள்ளார். இசக்கி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஜெய் கொடூர சைக்கோ கொலைகாரனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சுந்தர். சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.