• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் பாராட்டு!

‘மதுர குலுங்க குலுங்க..’, ‘கத்திரி பூவழகி..’ என ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியவர் வேல் முருகன். இவரது மூத்த மகள் ரக்‌ஷனாவிற்கு வயது 10. ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்ஷனா இதை முறியடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார். திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரையும் ரக்க்ஷனா குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.