• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தடபுடலாக நடந்து வரும் ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண ஏற்பாடுகள்!

ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமண நிகழ்ச்சி மும்பையின் செம்பூரில் உள்ள கபூர் குடும்பத்தின் மூதாதையர் இல்லமான ஆர்.கே. ஹவுஸில் ஏப்ரல் மாதம் 16 ம் தேதி நடக்க இருக்கிறது.. ஏப்ரல் 13 அன்று மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இந்த திருமண விழாவின் ஹால்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று நடைபெறுகிறது.

‘இந்த திருமண நிகழ்ச்சிக்கு யூசுப் பாய் தலைமையிலான மும்பையின் மிகச் சிறந்த பாதுகாப்பு நிறுவனமான 9/11 பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது’ என்று ஆலியா பட்டின் உறவினர் ராகுல் பட் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ‘இந்நிறுவனத்தைச் சேர்ந்த 200 பவுன்சர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவிர ட்ரான் கேமராக்களும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். விருந்தினர்களின் பாதுகாப்பை கண்காணிக்க வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் பாதுகாப்பு அலுவலர்களின் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.