• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் அல்டிமேட்! வின்னர் பாலாவிற்கு கிடைத்த பரிசு?

பிக்பாஸ் 5 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஓடிடி வெர்சனாக முதல் முறையாக 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஜனவரி 30ம் தேதி துவங்கியது! மொத்தம் 14 போட்டியாளர்களுடன் இந்த போட்டி துவங்கப்பட்டது.

தொடக்கத்தில், நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சிறிது நாட்களிலேயே அவர் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிறகு சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சிம்பு தொகுத்து வழங்கிய விதம், அனைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதனால் பலர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க துவங்கினர். 70 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை, ரம்யா பாண்டியன் ஆகியோர் தகுதி பெற்றனர். இவர்களில் பாலா, பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனின் டைட்டிலை வென்றார்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றி பெற்ற பாலாவிற்கு கோப்பையை, சிம்பு வழங்கினார். டிராஃபியுடன் ரூ.20 லட்சம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகை மற்றும் டைட்டில் வின்னர் பரிசுத் தொகை என மொத்தமாக ரூ.50 லட்சத்தை எடுத்துச் சென்றார் பாலா.