• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தொடங்கியது அஜித் 61 படப்பிடிப்பு!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.