• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தடைபோட்ட ஆஸ்கர் அகாடெமி! வில் ஸ்மித்தின் பதில்!

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிப்பதாக ஆஸ்கர் அகாடமி அதிரடியாக அறிவித்தது.

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாக தற்போது வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது சம்மந்தமாக அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.