• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்டோபர் 26க்குள் கொடுக்கனும்.. வீட்டு உரிமையாளர்களுக்கு திடீர் உத்தரவு!

சென்னையில் சொந்த வீட்டை வாடைக்கு விட்டுள்ளவர்கள் அவர்களுடைய விவரங்களை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் என்றும், அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிவில் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.