• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பு; கடத்தப்பட்ட சிறுவனை அதிரடியாக மீட்ட போலீஸ்!

By

Aug 29, 2021 , ,

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – லதா தம்பதியின்14 வயது மகன் சபரி கடந்த 22ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணி கடை உரிமையாளர் சரவணன் என்பவரின் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. மர்ம நபர் ஒருவர் சிறுவனை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் திருப்பி அனுப்பி விடுவதாக கூறினார்.

இதனையடுத்து சிறுவன் கடத்தப்பட்டதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்தார்.செல்போனில் பேசிய இடங்கள், முதலான விபரங்களை வைத்து சேகரித்த தகவலின்படி சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.

அவர் சீலநாயக்கன்பட்டி எம்ஜிஆர் நகரில் குடியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்றபோது செல்வகுமார் இல்லை . தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் செல்வகுமாரை கைது செய்தனர். அவர் பணத்திற்காக சிறுவனை கடத்தியது தெரியவந்தது.

கடந்த 22ஆம் மேட்டூர் சென்று மது அருந்திவிட்டு சிந்தாமணியூர் அருகே திரும்பி வரும்போது ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனை காரில் கடத்திக் கொண்டு வந்து பராசக்தி நகரில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் பேரில் அங்கு சென்று சிறுவனை தனிப்படையினர் மீட்டனர்.