• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கைகோர்த்த லைகர் கூட்டணி!

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்துக்கு JGM என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ம் விண்வெளியை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.