• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜனநாயக நாட்டில் சசிகலா சுதந்திர பறவையாக எங்க வேணாலும் செல்லலாம்…

Byகாயத்ரி

Mar 29, 2022

சமீப காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் சசிகலா அடுத்த வாரம் சேலம் சுற்றுபயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் அதிமுகவிற்குள்ளேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை சசிகலா சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டு கட்ட சுற்றுபயணம் மேற்கொண்ட சசிகலா அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வந்தார். தற்போது மூன்றாவது கட்டமாக அடுத்த வாரம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு சசிகலா சுற்றுபயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சுற்றுபயணம் குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவின் சுற்றுப்பயணத்தால் எந்த மாற்றமும் நிகழாது. இது ஒரு ஜனநாயக நாடு என்பதால் சசிகலா சுதந்திர பறவையாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்று தெரிவித்துள்ளார்.