• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாக்கடையை சுத்தம் செய்த கவுன்சிலர் .. பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் …

Byகாயத்ரி

Mar 24, 2022

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கவுன்சிலர் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டன இரு கட்சிகளும்.
இந்நிலையில் டெல்லியின் பூங்கா நகர் பகுதியில் குப்பைகள் எடுக்கப்படாமல் அடைத்துக் கிடந்த சாக்கடைக்குள் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலரான ஹசீப் உல் ஹசன் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அவர் சுத்தம் செய்ததையும் அதற்குப் பிறகு அவருக்கு தொண்டர்கள் முதல்வன் பட ஸ்டைலில் பாலாபிஷேகம் செய்ததையும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.