• Tue. Apr 30th, 2024

தெலங்கானா தீ விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் அறிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம்,போய்குடாவில் பழைய பொருட்கள் உள்ள குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடோனில் இருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு எட்டு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.மேலும்,தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.

ஷாக் சர்க்யூட் ஏற்பட்டதே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும்,குடோனில் இருந்த தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.எனினும்,இந்த தீ விபத்து தொடர்பாக விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
:
இந்நிலையில்,தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தெலுங்கான முதல்வர் அலுவலகம் கூறியிருப்பதாவது:”செகந்திராபாத்,போய்குடாவில் உள்ள ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முதல்வர் ஸ்ரீ கே. சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விபத்தில் இறந்த பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு,நிவாரணத் தொகையாக ரூ. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும்,உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமைச் செயலாளர் ஸ்ரீ சோமேஷ்குமாரிடம் முதல்வர் கூறியுள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *