• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்!

இயக்குனர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் வலம் வருபவர் விக்னேஷ் சிவன். 2015 ம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட் ஆனதுடன், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் சேர்ந்து 2019ல் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினர். கூழாங்கல், ராக்கி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் 62வது படமான ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் டீமுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இந்த தகவலையும் அவரே பகிர்ந்திருந்தார்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதால் அந்த நிறுவனத்தை தடை விதிக்க வேண்டும்.

இது தவறான முன்னுதாரணமாக இருப்பதால் விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பக்சர்சின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். அதோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.