• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தந்தை பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பை பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்.

அவரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.