• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூ. 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும் போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக கட்டுமானம் இருக்கக்கூடாது என 18 நிபந்தனைகள் தமிழக அரசுத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், 62,000 சதுர அடியிலிருந்து 77,000 சதுர அடியாக மைதானம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம், கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.