• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராதேஷ்யாம் படத்தை பார்த்துவிட்டு, ரசிகர் தற்கொலை!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம்! இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்! படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவி தேஜா என்ற 24 வயது இளைஞர் பிரபாஸின் தீவிர ரசிகர். இவர் ராதேஷ்யம் திரைப்படத்திற்கு வரும் கலவையான விமர்சனங்களை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் தாயுடன் இந்த படத்தின் விமர்சனங்கள் குறித்து மிகவும் கவலையாக தெரிவித்துக் கொண்டு இருந்துள்ளார். படம் சரியாக ஓடாததால் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.