• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை…

Byகாயத்ரி

Mar 10, 2022

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீராம்-தீபா தம்பதி மகள் தக்ஷிண்யா என்ற 4 வயது சிறுமி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

உலகத்தில் உள்ள 196 நாடுகளின் நாணயங்கள் பெயர்களை மடை திறந்த வெள்ளம் போல் சொல்லி அசத்துகிறார் 4 வயது சிறுமி. 4 நிமிடம் 40 வினாடிகளில் உலக நாடுகளின் நாணயங்களை பட்டியலிடுகிறார்.இவர் திறமையை அப்துல் கலாம் உலக சாதனை குழுமம் அங்கீகரித்து பாராட்டு சான்றிதழும், பதக்கமும் கொடுத்து கவுரவித்துள்ளது.இக்குழந்தையின் ஒரு வயதிலேயே எதை சொன்னாலும் அதனை புரிந்து கொண்டு அதை அப்படியே திரும்பச் சொல்லும் திறன் இருப்பதை அறிந்த பெற்றோர் அவருக்கு பயிற்சியும் ஊக்கமும் கொடுத்ததன் மூலம் இச்சாதனையை புரிந்துள்ளார்.கடந்த ஒரு மாதமாக இப்பயிற்சி கொடுத்துள்ளதால் சிறுமி தக்ஷிண்யா இந்த சாதனையை புரிந்துள்ளார்.