• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Mar 10, 2022

காலிபிளவர் முட்டை டிப்:

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் – 1 கப், முட்டை – 3, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன், சிக்கன் மசாலா தூள் – 1ஃ2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை முட்டைக் கலவையில் நனைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் முட்டை டிப் ரெடி!!!