• Mon. Oct 19th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காய்கறி, பழங்கள் சாகுபடி குறித்து பழங்குடியின மக்களுக்கு பயிற்சி முகாம்!

கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் தாட்கோ இணைந்து நடத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான காய்கறி மற்றும் பழ வகைகள் சாகுபடி குறித்த 2 நாள் பயிற்சி முகாம் குஞ்சப்பனை ஆதிவாசி கிராமத்தில் நடைபெற்றது. உதவி தோட்டக்கலை அலுவலர் அஜீத் வரவேற்றார். இந்த பயிற்சியில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்து, காய்கறி மற்றும் பழ வகைகள் சாகுபடி குறித்து விளக்கிப் பேசினார்.

துணைத் தோட்டக்கலை அலுவலர் சந்திரன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கள அலுவலர் கமலக்கண்ணன் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்து பயன்பெறுவது தொடர்பாக பேசினார்கள்.

இதில் 40 பழங்குடியின விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக கோவைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முடிவில் உதவி தோட் டக்கலை அலுவலர் மஞ்சுளா நன்றி கூறினார்.