• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நான் தப்பிச்சுல்லாம் ஓடல – கணேஷ்கர்

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து காமெடி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணேஷ்கர் சாலையில் தனது காரில் பட்டினம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும், காரை அங்கேயே போட்டுவிட்டு தப்பித்து ஓடி தலைமறைவாகியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேஷ்கர் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சாலையில் இருந்த வேகத்தடையில் மோதி நிலை தடுமாறியதால் கார் டிவைடரில் மோதியது. சென்ற வேகத்தில் நெஞ்சில் ஸ்டேரிங் அடித்தது.

இந்நிலையில் விபத்து குறித்து செய்தி அறிந்து ஆர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து என்னை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அந்த இக்கட்டான நேரத்தில் கார் எப்படி ஞாபகத்திற்கு வரும். நாங்கள் மருத்துவமனையில் இருந்தது போலிஸ்க்கு தெரியாது. அதனால்தான் அவர்கள் என்னை தேடினர். நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டினேனா என சோதனை செய்யவே அவர்கள் என்னை தேடினர். தான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை, தலைமறைவாகவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.