• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுதா கொங்கராவை அப்டி சொல்லாதீங்க – இயக்குனர் பாலா!

விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று திரைப்படம் இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள சுதா கொங்கராவை அப்படி சொல்லாதீர்கள் என இயக்குனர் பாலா பேசியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுதா கொங்கரா இப்போது தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் பாலா இறுதிச்சுற்று படத்தை பார்த்துவிட்டு சுதாவின் ஹார்ட் ஒர்க்கை மிகவும் பிரமித்து போனதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் . அப்பொழுது தமிழ் சினிமாவில் ஆண் இயக்குனர்களை பெரும்பாலும் இயக்குனர்கள் என்றே அழைக்கிறார்கள் ஆனால் ஒரு பெண் இயக்குனர்களை பெண் இயக்குனர் என அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள் எனக் கேட்டதற்கு.. அந்த வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது.. அது மிகப் பெரிய பாவம்.. இயக்குனர்களில் என்ன ஆண், பெண்.. இயக்குனர்களில் அனைவரும் சமம் தான். என அந்த நேர்காணலில் பாலா தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.