• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரங்களை மதுரை சிறப்புநீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார்.

யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்களை மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவிக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரில் 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், யுவராஜின் டிரைவர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும் மற்றும் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 வருட கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.