• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இம்மாத இறுதிக்குள் கட்சிபொதுக்குழு கூட்டம் ..ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆலோசனை!

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கேக் வெட்டி மகளிர் தினத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டாடினர்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாத இறுதியில் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பான ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, பேசிய அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி, அதிமுகவை வழிநடத்த இருபெரும் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.