• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் உலக மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார். குடும்பம் மற்றும் பணி சூழல் ஈடுகட்டும் விதமாக, மூன்று புதிய ஷிப்டுகளை அறிமுகம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மும்பையில் பெண் காவலர்கள் 8 மணி நேர ஷிப்ட்கள் அடிப்படையில் பணிபுரிவார்கள் என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

பெண் பணியாளர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வீடு சமநிலையில் உதவுவதே இந்த உத்தரவின் நோக்கமாகும். முன்னதாக மகாராஷ்டிர காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த பாண்டே 2022 ஜனவரியில் எட்டு மணி நேரப் பணியைத் கொண்டு வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், பெண் காவலர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன என்பதை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை என மூன்று ஷிப்டுகளில் பணிபுரிய வேண்டும். மறுபுறம், இரண்டாவது விருப்பம் காலை 7 முதல் மதியம் 3 மணி வரை, மதியம் 3 முதல் இரவு 11 மணி வரை மற்றும் இரவு 11 முதல் காலை 7 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.