• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

என் காசு எல்லாம் போச்சு.. – கோபத்தில் சூரி

சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இந்த வாரம் வியாழ கிழமை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்ற சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, விஜய் டிவி புகழ், வினய் என பலர் நடித்துள்ள்ளனர்.

இதில் ஒரு பெரிய வீட்டில் இந்த ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது, சூரியும், புகழும் ஓர் சம்பவம் செய்துள்ளனர்.

அதனை அண்மையில் எதற்கும் துணிந்தவன் சிறப்பு நிகழ்ச்சியில் அவர்களே சொல்லிவிட்டனர்.

அதாவது, புகழ், ஷூட்டிங் கடைசி நாளன்று சூரியிடம், வாருங்கள் அங்கு ஒரு நீச்சல் குளம் இருக்கிறது அங்கு ஒரு வீடியோ ஷூட் செய்யலாம் என கேட்டுள்ளார். அதற்கு முதலில் சூரி மறுத்து அடுத்து உடனே ஓகே சொல்லியுள்ளார்.

அதன்பிறகு புகழ், போனை தண்ணீருக்குள் வைத்து ஷூட் செய்வோம் என கூற, அதற்கும் சூரி முதலில் மறுத்து பின்னர் ஓகே சொல்லியுள்ளார். ஆனால், தண்ணீருக்குள் சூரியின் போன் விழுந்துவிட்டது. அதன் பிறகு, புகழ் போனும் அதில் விழுந்துவிட்டது. முதலில் புகழ் போன் வேலை செய்யவில்லை.

ரூமுக்கு சென்று ஆன் செய்தால்,சூரியின் போனும் வேலை செய்யவில்லையாம். இதில் கொடுமை என்னவென்றால் சூரி ஒரு 6 நாள் முன்னர் தான் புதுசாக ஒன்றரை லட்சம் மதிப்புள்ள அந்த போனை வாங்கியுள்ளார். அதனால் அங்கு நிகழ்ச்சி நடக்கும் போதே, உன்னால தான்டா என் ஒன்றரை லட்சம் ரூபாய் போன் போச்சி என அன்பாக கடிந்து கொண்டாராம்..