• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்க்கு கடந்த மாதம் ஒன்றாம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டும், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.. அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டார். இந்த நிலையில் தற்போது தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.