• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிபி அல்டிமேட் போட்டியாளர்களை விளாசும் சிம்பு!

வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை சிம்பு லெஃப் அண்ட் ரைட் வாங்கிய ப்ரோமோ ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தரமான சம்பவத்திற்காக காத்திருக்கிறார்கள்..

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதும், கடந்த வாரம் முதல் புது ஹோட்டாக சிம்பு என்ட்ரியாகி உள்ளார். போட்டியாளர்களை தனியாக சந்தித்து ஜாலி பண்ண சொல்லி வாக்குறுதி கேட்டார். ஆனால் வழக்கம் போல் இந்த வாரத்திலும் டாஸ்க் அனைத்தையும் சொதப்பி போர் அடிக்க வைத்துள்ளனர். நாமினேஷனில் 7 பேர் உள்ளனர். இந்த வார்ம டபுள் எபிக்ஷன், லாஸ்லியாவின் வைல்டு கார்டு என்ட்ரி ஆகியன இருக்கும் என கூறப்படுகிறது.

வழக்கமாக வார இறுதியில் வரும் கமல், போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அட்வைஸ் செய்வார். ஆனால் வந்த முதல் வாரத்திலேயே போட்டியாளர்களின் பெர்ஃபாமன்சை பார்த்து கடுப்பாகி விட்டார் சிம்பு. இன்றைய ப்ரோமோவில், மக்கள் பார்க்கிறார்கள் என்பதையே நீங்கள் மறந்து விட்டீர்கள். பார்ப்பவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என முகத்திற்கு நேராக கடுமையாக கூறி விட்டார். இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும் சிம்பு போட்டியாளர்களை கையாளும் முறை பலரையும் கவர்ந்துள்ளது.