• Sun. May 5th, 2024

உத்தரவை மீறி நின்ற திமுக வேட்பாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- திருமாவளவன் கோரிக்கை..

Byகாயத்ரி

Mar 4, 2022

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக பதவியேற்றனர்.

இதையடுத்து, மேயர், துணை மேயர், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று (4-ம் தேதி) நடைபெற்றது.முன்னதாக நேற்று, திமுக. சார்பில் 20 மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுக.வினர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது; “கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். மேலும், கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும்” என்று, மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *