• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உக்ரைன் போரால் பங்குச்சந்தை வீழ்ச்சி – மதுரையில் பங்குச் சந்தை ஆலோசகர் மனைவியுடன் தற்கொலை.

Byகுமார்

Mar 3, 2022

மதுரை குயவர்பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து வருகிறார். மேலும் பங்குச்சந்தையில் பல நிறுவனங்களில் நாகராஜனும் முதலீடு செய்துள்ளார். தற்போது ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் முதலீடு செய்த பலர் விழி பிதுங்கி நிற்கின்றனர். அந்த வகையில் பங்குசந்தையில் நாகராஜனின் ஆலோசனையின்படி முதலீடு செய்த பலர் பங்குசந்தை வீழ்ச்சி குறித்து நாகராஜனிடம் வீழ்ச்சி குறித்து விவரம் கேட்டதாக தெரிகிறது. பங்கு சந்தையில் நாகராஜனும் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். வீழ்ச்சியின் காரணமாக மனமுடைந்து இருந்த நாகராஜன் நேற்று தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. குழந்தைகளை பள்ளியில் இருந்து உறவினர்கள் அழைத்து வந்து வீட்டில் வைத்திருந்த நிலையில், நாகராஜனை போன் மூலம் தொடர்பு கொண்டனர். மொபைல் போன் அழைப்பை ஏற்காத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் நாகராஜன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டியிருந்தது. இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் கதவைத் திறந்து பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து நாகராஜன் மற்றும் அவரது மனைவி லாவண்யாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பங்குச் சந்தை வீழ்ச்சியின் காரணமாக இறப்பு ஏற்பட்டதா, அல்லது நாகராஜனின் ஆலோசனைப்படி முதலீடு செய்த யாரும் இவருக்கு அழுத்தம் கொடுத்து அந்த அழுத்தத்தின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும், நாகராஜனை யார் யார் தொடர்பு கொண்டனர் என்பது குறித்தும்  நாகராஜனுக்கு கடந்த சில தினங்களாக  மொபைல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்..