• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மெட்ரோ ரெயிலில் போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ்!..

By

Aug 22, 2021

சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளையில் இருந்து மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரயில்கள் இயக்கப்படும்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் இயக்கப்படும். முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது, வரை முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 176 பயணிகளிடமிருந்து ரூ.35,200 வசூலிக்கப்பட்டுள்ளது.