தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடற்கரை – இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.