• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகை மீனாவின் க்யூட் சேலஞ்ச்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மக்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சில காலங்கள் விலகி இருந்த மீனா, தற்போது பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இணையத்தில் பரவி வரும் சேலஞ்ச் ஒன்றை செய்து, இதனை செய்ய எவ்வளவு நேரம் ஆச்சுனு மட்டும் கேட்காதீங்க என கியூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.