• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இதான் “டான்” கதையா? நம்பலாமா?

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் கதை பற்றி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தன. டான் படத்தில் இருந்து வெளியான ஜலபுலஜங் பாடலிலும் தான் ஒரு கல்லூரி மாணவனாகவே நடித்து காலேஜ் பேக்ரவுண்டில் நடனமாடிய வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் கதை என சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வலம் வருகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படம் போல இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமா இயக்குநர் ஆவதே கதை என்கின்றனர்.

ஒவ்வொரு படம் உருவாகும்போது, படத்தின் கதை இதுதான் என வதந்திகள் வருவது வழக்கம்.. ஆனால், சில உண்மையான தகவல்களும் வெளியாகி இருப்பது பல படங்கள் வெளியான பிறகு இரண்டும் ஒன்றாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன

அதுமட்டுமின்றி, இந்த படத்தின் கிளைமேக்ஸில் இயக்குநர் கெளதம் மேனன் வேற கேமியோவாக வரப் போகிறாராம். கல்லூரி போர்ஷன்கள் ஆரம்பத்திலேயே முடிந்து விட்டு, அதன் பின்னர் சிவகார்த்திகேயன் இயக்குநராக அவதாரம் எடுப்பது தான் கதை என்கின்றனர்.