• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மூன்றே நாட்களில் மலைவாழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியர்!…

By

Aug 20, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை அடுத்த ராம்நகர் பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த16ஆம் தேதி அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மலைவாழ் மக்கள் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வேண்டுமென சிவகாசி சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் 3 நாட்களில் கோரிக்கையை பரிசீலனை செய்து 16 மலைவாழ் மக்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை சிவகாசி சார் பிரித்திவிராஜ் வழங்கினார். மூன்றே நாட்களில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய சார் ஆட்சியருக்கு மலைவாழ் மக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.