சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.72.93லட்சம் ரொக்கம்,1.9 கிலோ தங்கம், 3.5 கிலோ வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அப்படி அம்மன் அருளால் நேர்த்திக்கடன் நிறைவேறிய ஏராளமான பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஏராளமான தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 14 நாட்களில் மட்டும் 1 கிலோ 980 கிராம் மதிப்பிலான தங்கம், 3 கிலோ 585 கிராம் மதிப்பிலான வெள்ளி மற்றும் 72 லட்சத்து 93 ஆயிரத்து 918 ஆயிரம் ரொக்கம் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.