• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயனை கலாய்த்த வாரிசு நடிகர்!

ல படங்களில் நடித்தும், வெற்றியடையாமல் பட வாய்ப்புக்களே இல்லாமல் இருந்து வந்தார் பிரபல வாரிசு நடிகர், ஒருவர்…

பிறகு வேறு வழியே இல்லாமல் ஹீரோவாக வந்த இமேஜை விட்டு, வில்லனாக நடிக்க தொடங்கினார்! தொடர்ந்து வில்லன் ரோல்கள் மட்டுமே வர, பட வாய்ப்பிற்காக வில்லன் ரோலுக்கு ஓகே சொன்னது தப்பாய் போய் விட்டது என்றும் இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கன்டிஷன் போட்டுள்ளாராம்!

லோ பட்ஜெட் படம் ஒன்றில் ஹீரோவாக நடித்தார் வாரிசு நடிகர். மீண்டும் ரசிகர்கள் நம்மை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என குஷியாகி விட்டார் வாரிசு நடிகர். இதனால் ஓவர் கெத்து காட்டி வந்தார் வாரிசு நடிகர்.

இந்த நிலையில், சினிமா ஃபைனான்சியர் வீட்டு கல்யாணத்தில் மாஸ் இமேஜை கொடுக்க சென்றார் வாரிசு நடிகர். ஆனால் அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காமல், இவர் உள்ளே நுழைந்த நேரம் பார்த்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தார். சிவகார்த்திகேயன் செல்ல வழி ஒதுக்கிய பாதுகாவலர்கள் கூட்டத்தை க்ளியர் செய்தனர். இதில் கூட்டதோடு கூட்டமாக வாரிசு நடிகரும் ஒதுக்கி நிறுத்தப்படார். நினைத்ததற்கு மாறாக நடந்தால் பெரிய ஷாக்கான வாரிசு நடிகர், கெத்தை விட்டுக் கொடுக்காமல் திருமணத்தில் வாழ்த்தி விட்டு வந்து விட்டார்.

இருந்தாலும் தனக்கு நடந்ததை ஏற்க முடியாத வாரிசு நடிகர் சோஷியல் மீடியாவில், யாரு எல்லாம் மாஸ் பண்ணுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு…தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். உண்மையான திறமைக்கு ஆதரவு கொடுக்கனும் என மறைமுகமாக சிவகார்த்திகேயனை கலாய்த்து போஸ்ட் போட்டார். ஆனால் ஷார்ப்பான நெட்டிசன்கள், இவர் சிவகார்த்திகேயனை தான் கலாய்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு விட்டனர். சிவகார்த்திகேயனை கலாய்த்து போஸ்ட் போட போய், இப்போது இவரை கலாய்த்து கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் சிவகார்த்திகேயன் திறமைசாலி தான். சும்மா இல்லை…கடுமையான உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் டாப் ஹீரோவாக வளர்ந்து, 100 கோடி வசூல் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளது சாதாரண விஷயமல்ல என சிவகார்த்திகேயனை புகழ்ந்து நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிய துவங்கி விட்டனர். இதை கடுப்பான வாரிசு நடிகர், பதறி அடித்துக் கொண்டு தனது போஸ்டை நீக்கி விட்டார்.

ஆனால் அதை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து வைத்து, அதை வைத்தே விடாமல் வாரிசு நடிகரை கழுவி ஊற்றி வருகிறார்கள் நெட்டிசன்கள். என்னடா நாம் என்ன செய்தாலும் அதற்கு நேர்மாறாக நடந்து, நமக்கே வினையாக முடிகிறதே என நொந்து கொண்டுள்ளாராம் வாரிசு நடிகர்.