• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரபுதேவா வெளியிட்ட முதல் பார்வை! டிங் டாங் படப்பிடிப்பு தொடக்கம்!

பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.

இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். WeAllProduction, RRPictures தயாரிக்கும் ‘டிங் டாங் ‘ படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும், நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். ‘டிங் டாங் ‘ படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை நடன இயக்குநர் பிரபுதேவா இன்று வெளியிட்டார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஜே.எம் கூறுகிறபோது எனது இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இரண்டாவது படமாக ‘டிங் டாங் ‘உருவாகிறது. டிங் டாங் என்றாலே கடிகாரம் என்பது அனைவருக்கும் நினைவில் வரும். அதுபோல் தான் இப்படத்தின் கதையும் காலத்தினை முக்கியமான மையமாக வைத்து உருவாகிறது.

இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எங்கள் மரியாதைக்குரிய மாஸ்டர் பிரபுதேவா அவர்கள் வெளியிட்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தென் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் உயர்ந்த இடத்தில் இன்று அவர் இருக்கிறார். நானும் ராபர்ட்டும் அவரது படங்களில் உதவியாளராகப் பணியாற்றி இருக்கின்றோம். எங்களுக்கு எல்லா வகையிலும் குருவாக அவர் இருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்று எங்கள் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்” இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது என்றார் இயக்குநர்.