• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பட்டியலின தலைவரின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி..!

தனது காலில் விழுந்து வணங்கிய பட்டியலின தலைவரின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாஜகவின் உத்திரப்பிரதேச தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தனர்.

அதன்பின்பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார், பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கினார். இதனை பிரதமர் மோடி அவர்கள், தடுத்து நிறுத்தி தன் காலில் விழ வேண்டாம் என்று கூறினார். பின் தன் காலில் விழுந்த பட்டியலினத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியின் காலில் விழுந்து பிரதமர் மோடி அவர்கள் தொட்டி வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.