திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்கள் தப்பியோட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியில் துப்பாக்கி தொழிற்சாலை இந்தியன் வங்கி கிளையின் ஏடிஎம் அமைந்துள்ளது.
இதில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்கு மர்ம ஆசாமிகள் அதிகாலையில் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை நேரில் பார்த்த மக்கள், வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக வங்கி மேலாளர் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை கண்டதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)