• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி..

Byகாயத்ரி

Feb 18, 2022

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்.4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று(பிப்.18) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது. இன்று (பிப்..18) நடைபெறும் பயிற்சி வகுப்பில் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான ஆணை வழங்கப்படும். அந்த ஆணையை பெற்றுக்கொண்டு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு உடனே செல்ல வேண்டும். பயிற்சியில் பங்கேற்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.