• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

என்ன குத்து..? அரபிக் குத்து..போடுங்கடா பாட்ட…

Byகாயத்ரி

Feb 18, 2022

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை ஏராளமான பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கேப்ஷனாக மற்றொரு நள்ளிரவு விமானம் … இல்லை! இன்றிரவுக்கான ரிதம் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் அனிருத்தும் அரபிக்குத்து பாடலுக்கு தனது குழுவினருடன் நடனமாடிய வீடியோ, தொகுப்பாளினி பிரியங்கா, மகாபா அவர்களது குழுவினருடன் இந்த பாட்டுக்கு ஆடிய வீடியோ எல்லாம் சமூக வலைத்தளங்களில் தூள் கிளப்பி வருகிறது.