• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விவாகரத்துக்கு பின் எமி காதலிக்கும் நபர்?

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் எமி ஜாக்சன் கோலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார். இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது!.

இதனையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தற்போது நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. எட் வெஸ்ட்விக், இதற்கு முன் பல நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது!