• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாகுபலி நாயகனுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்…

Byகாயத்ரி

Feb 17, 2022

பிரபல நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ‘சலார்’ படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்டை’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மாறன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘மாறன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் பான் இந்திய ஹீரோவான பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தற்போது ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த டிடிவி தனய்யா தயாரிக்க உள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.