• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சூர்யா ரசிகர்களுக்கும் உண்டு அப்டேட்!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா, வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்த நிலையில், சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது!

தற்போது, இப்படத்தின் டீசர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வருகின்ற 18 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்காக பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூர்யா ரசிகர்களுக்காகவும் அப்டேட்டினை வெளியிட்டுள்ளது!