• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அய்யா வாங்க …அம்மா வாங்க…. ஓட்டு போட மக்களை அழைக்கும் பிரதமர் மோடி!

ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும் என இளைஞர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

உ.பி.யில் கடந்த 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.