• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 14, 2022
  1. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
    மாஜுலி
  2. எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும்
    செயல்முறையை பயன்படுத்துகிறது?
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
    ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
  3. அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
    லுஃப்ட்வாஃபே
  4. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
    கடன்-குத்தகை ஒப்பந்தம்
  5. முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
    ஸ்கந்தா.
  6. எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
    கோலாலம்பூர் (மலேஷியா)
  7. தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
    பிராமி வெட்டெழுத்துகள்.
  8. எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
    தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
  9. முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
    வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
  10. ஜெலோடோலாஜி என்றால் என்ன?
    சிரிப்பை பற்றிய படிப்பாகும்.