• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோப்ரா சூட்டிங்கை முடித்த கிரிக்கெட் வீரர்!

நடிகர் விக்ரம் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் சூட்டிங்கை நடிகர் விக்ரம் கடந்த ஜனவரி மாதத்தில் முடித்த நிலையில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் பிரபல கிரிக்கெட் வீரரும் படத்தின் சூட்டிங்கை தற்போது முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

நடிகர் விக்ரம் – இயக்குர் அஜய் ஞானமுத்து இணைந்துள்ள படம் கோப்ரா. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி, கனிகா, ஷானி சென் போன்ற பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

படத்தில் விக்ரம் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை அவர் கடந்த ஜனவரி மாதத்திலேயே முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது விக்ரமின் மகான் படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோப்ரா படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கி இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளதாக அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இர்பானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இர்பானை போன்ற அன்பான நபருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி என்றும் இது ஒரு மறக்க முடியாத பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இர்பான் பதான், முதல் முறையாக தமிழ் சினிமாவில் இந்த பயணத்தை அளித்ததற்கு நன்றி என்றும் தனது முதல் படத்திலேயே இத்தகைய அற்புதமான டீமுடன் செயல்பட தனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பெரிய திரையில் அஸ்லானை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்