• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 11, 2022

பிசிபேளாபாத்:

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 1ஃ2 கப், பீன்ஸ் – 1ஃ2 கப், உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – 1ஃ4 கப், வெங்காயம் – 2, தக்காளி – 3, பூண்டு – 6 பல், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, முந்திரி – 10, கறிவேப்பிலை – தேவையான அளவு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு, கொத்தமல்லி – 2.1ஃ2 டீஸ்பூன், கருப்பு உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம், எள்ளு – தலா 1ஃ2 டீஸ்பூன், வெந்தயம் – 1ஃ4 டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 1 இஞ்ச், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன், கடுகு – 1ஃ2 டீஸ்பூன், எண்ணெய் – 1ஃ2 டீஸ்பூன்
செய்முறை:-
5 கப் அரிசியை தண்ணீருடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பருப்பு, காய்களை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களை எண்ணெயில் நன்றாக வறுத்து, பொடி செய்து கொள்ளவும். பின்னர் கடாயில் பூண்டு, தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் அரைத்த மசாலா பொடியைச் சேர்த்து நன்கு விழுதாகும் வரை வதக்கவும். அதன் பின் வேக வைத்த காய்கறி, பருப்பு சேர்த்துக் கலந்து இறுதியாக சாதத்தை சேர்த்து உப்புச் சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்தில் நெய்யுடன் சேர்த்து கலக்கவும். சூடான, சுவையான பிசிபேளாபாத் ரெடி.