பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மணிரத்னத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்று செய்தி இணையத்தில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதாவது, மெட்ராஸ் டாக்கீஸ் இந்த வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. “பொன்னியின் செல்வன் உரிமையானது கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும், OTT-ல் மட்டும் ரிலீஸ் ஆகாது. திரையரங்கு அனுபவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனின் OTT தளத்தில் நேரடியாக வெளிடுவது என்பது மெக்பெரிய வதந்திகள்.
ரசிகர்கள் இந்த பெரிய படத்தை பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரையரங்கில் சென்று பார்த்து மகிழவேண்டும் என்று படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா கிருஷ்ணன், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டன.











; ?>)
; ?>)
; ?>)