• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி அருகே தொழிலாளியை..,
மரக்கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் ஒருவர் கைது..!

பொள்ளாச்சி அருகே தேங்காய் உரிக்கும் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், தொழிலாளி ஒருவர் மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியில மகாலிங்கம், செல்வராஜ் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு செல்வராஜ், மகாலிங்கம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு செல்வராஜ் மகாலிங்கத்தை மரக் கட்டையால் தாக்கி உள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் மகாலிங்கம் உயிரிழந்தார். இதையடுத்து மகாலிங்கத்தின் உறவினர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்உத்தரவின்பேரில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் சின்ன காமன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் ஆலங் கடவு பகுதியில் பதுங்கி இருந்தசெல்வராஜ் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த 24மணி நேரத்தில் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தது கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.